Advertisment

ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி… திருச்சி என்.ஐ.டி-ல் இன்ஜினியரிங் சீட்; தமிழக பழங்குடியின மாணவிகள் சாதனை

ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக பழங்குடியின மாணவிகள்; திருச்சி என்.ஐ.டி.,யில் சீட் பெற்று சாதனை; தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rohini nit

ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி.,யில் சீட் பெற்ற பழங்குடியின மாணவி ரோகிணி (புகைப்படம் – ஏ.என்.ஐ)

2024 ஜே.இ.இ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) சீட் கிடைத்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் உள்ள முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு கூட்டு நுழைவுத் தேர்வு எனப்படும் ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடும் போட்டி நிறைந்த இந்தத் தேர்வு பல்வேறு அமர்வுகளாக ஆன்லைன் முறையில் நடைபெறும்.

இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின மாணவிகள் அசத்தியுள்ளனர். ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்த மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் எனப்படும் என்.ஐ.டி.,யில் பொறியியல் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

ஜே.இ.இ தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி ரோகிணிக்கு வேதிப் பொறியியலும் (Chemical Engineering), மாணவி சுகன்யாவுக்கு உற்பத்தி பொறியியலும் (Production Engineering) படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

rohini
மாணவி ரோஹினி

இதுகுறித்து மாணவி ரோகிணி கூறுகையில், ”பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜே.இ.இ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று பெற்றேன். திருச்சி என்.ஐ.டி.,யில் சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jee Main Scheduled Tribes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment