Advertisment

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Multi Tasking Staff – (Office and Training) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது தகுதி: 18 முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.dssc.gov.in/files/Recruitment_Six_MTS.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment