மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீட் கட்ஆப் மதிப்பெண்கள் உயரும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மருத்தும் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு சவருகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெற்று சரியான கட்ஆப் மாதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது.
இந்த நீட் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முடிவுகளை மாணவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் ஜே மற்றும் ஆந்திராவின் போரா வருண் சக்ரவர்த்தி ஆகியோர் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
மொத்தம் 20.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர், அதில் 11.45 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். நீட் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், தகுதியான மாணவர்கள் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அந்தந்த மாநில அதிகாரிகளால் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (எம்சிசி) நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
இதனிடையே நீட் கட்ஆப் மதிப்பெண் கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. பொது பிரிவினருக்கு 2021-ம் ஆண்டு 138 ஆக இருந்த கட்ஆப் மதிப்பெண் கடந்த 2022-ல் 117 ஆக இருந்தது. ஆனால் நடப்பு (2023) ஆண்டில், பொது பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் 137 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 2021-ம் ஆண்டு 108 ஆக இருந்த கட்ஆப் மதிப்பெண் 2022-ல் 93 ஆக இருந்த நிலையில், 2023-ல் 107 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil