புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ரிஷிகேஷ் சர்வதேச இளங்கலை பட்டைய பாடநெறி தேர்வில் 45 புள்ளிகள் எடுத்து உலக அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் தலைமைச் செயலாளர் பத்மநாபன் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் இவருடைய பேரன் ரிஷிகேஷ். பெங்களூரில் உள்ள கிரீன்வுட் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த இவர், சர்வதேச இளங்கலை பட்டய பாடநெறி ஐ.பி.டி.எல் தேர்வில் (தேர்வு உலக அளவில் நடக்கும்) உலக அளவில் 45 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்த விஷயமாக தெரிகிறது.
மேலும் சர்வதேச இளங்கலை திட்டம் (IBDP) தேர்வில் தேசியம், அதன் முடிவுகள் சனிக்கிழமை மே 2025 தேர்வுக்கான வெளியிடப்பட்டன. பள்ளியில் பதவி விலகும் கேப்டனாகவும் இருந்தார் .மேல்படிப்பை அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலைப் முதல் பாடமாக எடுத்து படிக்கப் போகிறார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி