CBSE 10Th Result Released Today : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் – cbse.gov.in அல்லது cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவல், 99.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டின் (91.46) தேர்ச்சி சதவீதத்தை விட கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகமாகும். தேர்வுக்கு பதிவு செய்த 21,13,767 மாணவர்களில் தற்போது 20,97,128 மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 16,639 மாணவர்களின் முடிவுகள் செயல்பாட்டில் உள்ளன, என்றும், அவர்களின் முடிவுகள் வெளியாகும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வெளியான தேர்ச்சி முடிவுகளில் 2.76 சதவிகித மாணவர்கள் 95 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், இதில் கேரளாவில் திருவனந்தபுரம் 99.99 சதவீதமும், கர்நாடகாவின் பெங்களூரு 99.96 சதவீதமும், தமிழகத்தின் சென்னை 99.94 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. டெல்லி கிழக்கு 97.80 சதவீதமும், டெல்லி மேற்கு 98.74 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளது.
பெண்கள் 99.24 சதவிகித அதிகரிப்புடன் சிறப்பாக தேர்ச்சியை பெற்றுள்னர், சிறுவர்கள் 98.89 தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளனர். நிறுவன வாரியாக, அரசு பள்ளிகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளது. இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கடந்த ஆண்டு, அவர்கள் 99.23 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளன. ஜவஹர் நவோதயா விடலாயா தேர்ச்சி சதவீதம் முந்தைய ஆண்டின் 98.66 ஐ விட 99.99 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகள் 96.03 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளன
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.88 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். (கடந்த ஆண்டு 77.82 சதவீதம்) சுயாதீன பள்ளிகள் பிரிவில் இருந்து 99.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.81 சதவீதமாக இருந்தது.
தொற்றுநோய் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாததால், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ முடிவுகள் மாற்று மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்களும், ஆண்டு முழுவதும் நடைபெறும் பல்வேறு உள் தேர்வுகள் அல்லது சோதனை தேர்வுகளுக்கு 80 மதிப்பெண்களும் வழங்க வாரியம் முடிவு செய்தது அதன்அடிப்படையில் தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil