Advertisment

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி; கவுன்சலிங்கை விரைந்து முடிக்க தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்கிற்கு மத்திய அரசு அனுமதி; சேர்க்கை நடைமுறையை குறித்த நேரத்திற்குள் முடிக்க ஆளுனர் தமிழிசை அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
Tamilisai.jpg

புதுச்சேரி எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்கிற்கு மத்திய அரசு அனுமதி; சேர்க்கை நடைமுறையை குறித்த நேரத்திற்குள் முடிக்க ஆளுனர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கவுன்சலிங் செயல்முறையை குறித்த கால அவகாசத்திற்குள் நடத்தி முடிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலதாமதமாக நடத்தப்பட்டதற்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவக் கழகம் கடிதம் அனுப்பி இருந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்விச் சேர்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்த போதும் இதையே நேரில் வலியுறுத்தினேன். பிரதமரின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பயன்பெறும் அளவிற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கால நீட்டிப்பு பெற்று தரப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இதற்கிடையில், தேசிய மருத்துவக் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தை அணுகி மருத்துவக் கல்வி சேர்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பெற்று இருக்கிறது. இதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, புதுச்சேரி அரசு அதிகாரிகள் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான கலந்தாய்வினை குறித்த நேரத்தில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுனர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mbbs Counselling Puducherry Dr Tamilisai Sounderrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment