தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; 72 க்ளர்க் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; 72 க்ளர்க் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TMB Jobs; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) கிளர்க் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தம் 72 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 06.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Probationary clerks

காலியிடங்களின் எண்ணிக்கை: 72

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 31.08.2023 அன்று 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எம்.பி.சி மற்றும் பி.சி பிரிவினர்களுக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 51,918

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2023.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/Clerk.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: