/tamil-ie/media/media_files/uploads/2023/06/tmb-jobs-1.jpg)
தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) மேலாளர், அலுவலர், ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 150 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!
Relation Managers
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.05.2023 அன்று 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Jewel Loan Relationship Officers
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.05.2023 அன்று 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Deputy General Manager
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு தனியார் அல்லது அரசு வங்கிகளில் மேலாளர் நிலையில் 2 வருடங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 31.05.2023 அன்று 50 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Credit Analyst
கல்வித் தகுதி: வணிகம் சார்ந்த ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.05.2023 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chief Managers
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.05.2023 அன்று 45 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2023.
மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.