தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) முதுநிலை வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 16.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Customer Service Executive
கல்வித் தகுதி: Graduate in Arts (including Commerce) and Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி: 31.01.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 72,061
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழித் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 2 மணி நேரம். கணினி வழித் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம், கணிதம், திறனறி மற்றும் வங்கி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.