தமிழ்நாட்டில் 10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். செய்முறை தேர்வு தொடங்கி எழுத்துத் தேர்வு நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டிற்கான 2023-24 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி இன்று (நவ.16) காலை வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளார். அதன்படி 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.
செய்முறைத் தேர்வு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு 2024-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு 2024-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள்
12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 2024-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியிடப்படும். 11-ம் வகுப்புக்கு மே 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை
வ.எண் |
தேதி |
பாடம் |
1. |
26.03.2024 |
தமிழ், இதர மொழிப்பாடங்கள் |
2. |
28.03.2024 |
ஆங்கிலம் |
3. |
01.04.2024 |
கணிதம் |
4. |
04.04.2024 |
அறிவியல் |
5. |
06.04.2024 |
விருப்ப மொழிப்பாடம் |
6. |
08.04.2024 |
சமூக அறிவியல் |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“