X,XI,XII வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேதிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதன்படி,
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள்: மார்ச் 2 முதல் மார்ச் 21 வரை நடைபெறும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 வெளியிடப்படும்
பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகள் : மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை நடைபெறும்,தேர்வு முடிவுகள் மே 4 வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் : மார்ச் 27 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெறும், தேர்வு முடிவுகள் மே 4 வெளியிடப்படும்
இந்நிலையில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த உயர் மேல்நிலை தேர்வுகள் குறித்த சில முக்கிய தகவல்களை இன்று தெரிவித்தார்.
X வகுப்பு பொதுத் தேர்வில் 9,45,006 மாணவர்களும், XII வகுப்பு பொதுத் தேர்வில் 8,16,359 மாணவர்களும், XI வகுப்பு பொதுத்தேர்வில் 8,26,119 மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்த கல்வி அமைச்சர், நடைபெறும் பொது தேர்வுகளுக்காக மாநிலம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக என்றும் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்வு நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்றும், வினாத்தாள்களைப் படிக்க மாணவர்களுக்கு கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றது என்றார் .
மேலும், பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"