தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் 12ம் வகுப்புத் தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்து முடிந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டபடி மே 6ம் தேதி பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் வருகின்ற 10ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ம் வகுப்பின் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“