/indian-express-tamil/media/media_files/2025/05/08/raani-12th-exam-276501.jpg)
கோவையில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த மூதாட்டி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
கோவை கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில், வசித்து வருபவர் ராணி. 70 வயதை கடந்த இவர், கணவரை இழந்து, தனியாக வசித்து வந்த நிலையில், தனது விடா முயற்சியால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
இந்த சாதனை பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ராணி, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதேபோல், ராணி எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே தனியாக படித்து தேர்வுக்கு தயாராகி பொது தேர்வு எழுதி ஒவ்வொரு பாடத்திலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்போது 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், அடுத்து, யோகா இளங்கலை மற்றும் நேச்சுரோபதி படிக்க விருப்பப்படுவதாக தெரிவித்து உள்ளார். இந்த வயதிலும் கல்வியின் மீது அவர் கொண்ட ஆர்வத்தையும், முயற்சியையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் ராணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த சாதனை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.