தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Marketing Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 1,50,000 – 2,00,000
Logistics Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 1,20,000
Consultant (Digital Transformation)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E. / B.Tech. (Computer Science / Information Technology) படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 2,00,000 – 2,50,000
Financial Management Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 1,50,000
Application Developer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E. / B.Tech. (Computer Science / Information Technology) படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 1,00,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்பு, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://aavin.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited, No.3A, Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai-600 035
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://aavin.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.