Agneepath Recruitment 2022 : இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகம் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து ஆள் சேர்ப்ப முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெறும் என்றும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விபரம்:
அக்னிபாத் வீரர், அக்னிபாத் வீராங்கனை, சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர், கால்நடை செவிலியர் உதவியாளர், இளநிலை சேவை அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகம் நடைபெறும் நாள் :
இந்திய ராணுவத்தில் ஆள் சேர்க்கும் இந்த முகாம் வரும் நவம்பர் 15 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் யார் பங்கேற்கலாம்?
தமிழகத்தின் வேலூரில் நடைபெறும் இந்த முகாமில், தமிழகம், ஆந்திரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் :
இந்த முகாமில் பங்கேற்பவர்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் குறித்து www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகாம் குறித்து விபரங்களும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கட்டாயம் எடுத்து வரவேண்டும். முழுமையான ஆவணங்கள் இல்லாலோ அல்லது தவறான ஆவணங்களை எடுத்துவருபவர்கள் கண்டிப்பாக முகாமில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் நேர்மையாகவும் வெளியிப்படை தன்மையுடனும் இந்த முகாம் நடத்தப்படும் என்றும், இடைத்தரகர்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுபவர்களை நம்பாமல் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று விண்ணப்பதார்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது.
மேலும் இது தொடர்பான மேலும் தகவல்களை பெற, ஆள்சேர்ப்பு அலுவலகம், புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 60009 என்று முகவரியிலோ அல்லது 044-25674924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“