அரசு வேலை வாய்ப்பு; 15000 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ரெடியா?

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 15000 காலியிடங்கள்; தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, கடைசி தேதி உள்ளிட்ட தகவல்கள் இங்கே

jobs
அரசு வேலை

தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களில் சில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி கடைசி தேதியாகவும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகள் கடைசி தேதியாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்: வேளாண் அறிவியல் மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தப் பணியிடங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

நிறுவனத்தின் பெயர்காலியிடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதிகடைசித் தேதி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்536910-ம் வகுப்பு – டிகிரி27.03.2023
எல்லைக் காவல் படை128410-ம் வகுப்பு27.03.2023
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்05டிகிரி, முதுகலை படிப்பு30.03.2023
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம்1312-ம் வகுப்பு30.03.2023
யந்த்ரா இந்தியா லிமிடெட்539510-ம் வகுப்பு, ஐ.டி.ஐ30.03.2023
தமிழ்நாடு அஞ்சல் துறை5810-ம் வகுப்பு31.03.2023
ரெப்கோ மைக்ரோ பினான்ஸ்9டிகிரி31.03.2023
இந்தோ – திபெத் எல்லைக் காவல்7110-ம் வகுப்பு31.03.2023
விமானப் படை350012-ம் வகுப்பு, டிப்ளமோ31.03.2023
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்16310-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி31.03.2023
தமிழக காவல் துறை108-ம் வகுப்பு03.04.2023
திருச்சி என்.ஐ.டி10டிகிரி03.04.2023
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா5000டிகிரி03.04.2023
ரயில்டெல்10இன்ஜினியரிங்03.04.2023
மின்சாரத்துறை35டிப்ளமோ, இன்ஜினியரிங்04.04.2023
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்60டிகிரி05.04.2023
தமிழக இந்து சமய அறநிலையத்துறை2818-ம் வகுப்பு – டிகிரி07.04.2023
தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறை418-ம் வகுப்பு10.04.2023
கனரா வங்கி2இன்ஜினியரிங்10.04.2023
இந்திய ரிசர்வ் வங்கி2510-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி10.04.2023
வேளாண் ஆட்சேர்ப்பு வாரியம்195டிகிரி10.04.2023
சுற்றுலா மேலாண்மை நிறுவனம்12டிப்ளமோ, டிகிரி12.04.2023
ஒத்துழைப்பு அமைச்சகம்32டிகிரி13.04.2023
காவல் துறை922310-ம் வகுப்பு, ஐ.டி.ஐ15.04.2023
நீர் மேம்பாட்டு நிறுவனம்4012-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி17.04.2023
இந்திரா காந்தி பல்கலைக்கழகம்20012-ம் வகுப்பு20.04.2023
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்285912-ம் வகுப்பு, டிகிரி26.04.2023
பெரம்பலூர் விவசாய அறிவியல் நிறுவனம்0210, 12-ம் வகுப்பு30.04.2023

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu and central govt jobs details in tamil

Exit mobile version