சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய மாமல்லபுரத்தின் பயணத்தின் வெற்றிக்கதையாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இயங்கி வரும் தேசிய அளவிலனா சுகாதார கருவி மேம்பாட்டு மையமும் (என்.எச்.எச்.ஐ.டி), சீனாவின் ஃபாங்க்செங்காங்கில் சர்வதேச மருத்துவ கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு மன்றமும் ( (ஐ.எம்.ஐ.சி.எஃப்)) கூட்டு ஆராய்ச்சி நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த, அக்டோபர் 12 ம் தேதி பாங்செங்காங்கின் மேயரான பான் ஜாங்போ தலைமையிலான 12 பேர் கொண்ட சீன விஞ்ஞானிகள் அண்ணா பல்கலைகழகத்தின் என்.எச்.எச்.ஐ.டி- வை பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டு ஆராய்ச்சியை நடைமுறை படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று 2020 ம் ஆண்டு சீனா செல்லவிருக்கின்றனர்.
Advertisment
அண்ணா பல்கலைக்கழகத்தின் என்.எச்.எச்.ஐ.டி மருத்துவ சாதனத் துறையில் கணிசமான முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், உலக அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்டி-பயோகிராம் , ஆட்டோமோட்டிவ் எக்ஸ்டெர்ல் டிஃபிபிரிலேட்டர் (ஏஇடி) ,சிக்குன்குனியா பரிசோதிப்பதற்கான கருவிகள் போன்றவைகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், " மருத்துவ சாதனங்கள் தயாரிப்பதில் சீனாவும், இந்தியாவும் அசாத்திய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். எனவே , கூட்டு ஆராய்ச்சி செய்வதினால் இரண்டு நாடுகளும் பலனடையும்" என்று தெரிவித்தார்.