Advertisment

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு; கவுன்சலிங் எப்போது?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை இன்றுடன் நிறைவு; 2.2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்; கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Eighty college girls donated hair for cancer patients, தலைமுடியை தானமாக அளித்த கல்லூரி மாணவிகள், புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய தலைமுடி அளித்த மாணவிகள், கோவை மாணவிகள், தமிழ்நாடு, புற்றுநோய் சிகிச்சை, 80 college girls donated hair for cancer patients, தமிழ்நாடு மஹிளா காங்கிரஸ், 80 girls donated hai to make wigs, tamil nadu college girl donated hair, cancer patients, tamil nadu netizens wishes college girls, coimbatore college girls donated hair, tamil nadu mahila congress

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை இன்றுடன் நிறைவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 20) நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisment

தமிழகம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 1.07 லட்சம் இளநிலை இடங்கள் இந்தக் கல்லூரிகளில் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் சேர்க்கை பெற மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். மேலும் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பங்களை சமர்பித்தனர்.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 2.20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே, அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது சுற்று 24 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறும். கல்லூரிகளில் ஜூலை 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Arts And Science College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment