scorecardresearch

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ல் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

Tamil News
Tamil News Updates

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் முதல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதில் மொத்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் கல்லூரியின் இறுதி நாளை அந்தந்த கல்லூரிகளே முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

அதனைத் தொடர்ந்து மே மாதம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எப்போது தொடங்கும் என்பது தொடர்பான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 19-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எத்தனை நாட்கள் கல்லூரி நடந்துவது வேலை நாட்கள் தொடர்பான முடிவுகளை கல்லூரி நிர்வாகமே நிர்வகித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் கல்லுரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜூன் 19-ந் தேதி திறக்கப்டுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu arts and science college reopen update after summer holiday