கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான தேவை காரணமாக 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 20% வரை அதிகரிக்க கல்லூரிகளுக்கு தமிழக உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
2023-24ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 20%, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% மற்றும் சுயநிதி கல்லூரிகள் 10% மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனுமதிக்கப்படும், என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. கல்லூரிகளில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, இன்னும் 27,215 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆண்டு கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு 2,46,295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஒரு மாணவர் வேறு கல்லூரியில் சேர விரும்பினால், கல்லூரிகள் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளில் அதிக மாணவர்களை சேர்க்க இந்த அறிவிப்பு உதவும் என்று கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
பெரும்பாலான கல்லூரிகளில் இந்த ஆண்டு அடிப்படை அறிவியல் படிப்புகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, கல்லூரிகள் வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளில் தங்கள் சேர்க்கையை அதிகரிக்க இதைப் பயன்படுத்தலாம், என கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“