Advertisment

தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு பல்லுயிர் வாரிய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

tn govt jobs

தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் தரவு உள்ளீட்டார் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator - Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் தாவரவியல் அல்லது விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.12.2022 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnbb.tn.gov.in/images/pdf/TNBB%20Data%20Entry%20Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Secretary, Tamil Nadu Biodiversity Board, TBGP Campus II Floor, Nanmangalam, Medavakkam Post, Chennai - 600100

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnbb.tn.gov.in/images/pdf/TNBB%20Data%20Entry%20Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment