இளநிலை படிப்புகள் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய கட்டுப்பாட்டில், தமிழத்தில் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் முன்பு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் 150 மருத்துவ இருக்கைக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றும் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்து கல்வி நிறுவனத்திற்கு கீழ் தொடங்கப்படும் மருத்து படிப்புகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக, ஆகஸ்டு 16ம் தேதி அரசு இதழில் புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசு 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. முதல் முடிவு என்பது மருத்துவக் கல்லூரிகளில் 150 இருக்கைக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. இது போல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்போது, மருத்துவக் இருக்கைகள் 50/100/150 என்று வருடத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 முதல் 2025 வரை புதிய மருத்துவ இருக்கைகளை அதிகப்படுத்த முடியாது என்றும் 150-க்கு மேல் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழத்தில் ஒட்டுமொத்தமாக 70 மருத்துவக் கல்லூரிகள். 10,000 மருத்துவ இருக்கைகள் உள்ளதால், கூடுதாக மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த அனுமதி இல்லை எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி மட்டுமே இருப்பதால், போதுமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“