தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் : 123 பணியிடங்களுகான முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக உள்ள 100 அசிஸ்டன்ட் , 23 அச்ஸ்டன்ட் என்ஜினியர் பணிகளை நிரப்புவதற்காக  வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

By: November 16, 2019, 3:38:34 PM

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காலியாக உள்ள 100 அசிஸ்டன்ட் , 23 அச்ஸ்டன்ட் என்ஜினியர் பணிகளை நிரப்புவதற்காக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் இன்ஜினியர்  பணி (காளியிடங்கள் – 23  )

அசிஸ்டென்ட் இன்ஜினியர்   (சிவில்) பணிக்கு – பி.இ சிவில் முடித்திருக்க வேண்டும். இதில் மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன

அசிஸ்டென்ட் இன்ஜினியர்  (மெக்கானிக்கல்) பணிக்கு –  பி.இ மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும் . இதில் மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன.

அசிஸ்டென்ட் இன்ஜினியர்  (எலெக்ட்ரிகல் ) பணிக்கு – பி.இ எலெக்ட்ரிகல் மற்றும் ஏலேக்ட்ரோனிக்ஸ் முடித்திருக்க வேண்டும். இதில் உள்ள காலியிடங்கள் 2

அசிஸ்டென்ட் இன்ஜினியர்  ( கம்ப்யூட்டர்) –  பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.டெக் ஐ.டி முடித்திருக்க வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கை 2

சம்பள அளவு – 36400 முதல்  115700 வரை

அசிஸ்டென்ட் பணி (காலியிடங்கள் – 100 ) 

கல்வித் தகுதி – பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு முதுகலை பட்டம்

 

 

சம்பள  அளவு – 20600 முதல் 65500 வரை

விண்ணப்பப் படிவம்:  

அசிஸ்டன்ட்  என்ஜினியர் பணிக்கான விண்ணப்பம்

அசிஸ்டன்ட் பணிக்கான விண்ணப்பம்

மேற்படி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்துவிட்டு , அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் , The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No 12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu civil supplies coporation job notification out eligibility important dates how to apply

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X