கோவை வேளாண் பல்கலை. 45-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

மொத்தம் 4,434 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.

மொத்தம் 4,434 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.

author-image
WebDesk
New Update
TN Governor asmh

கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,434 மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்.

Advertisment

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா இன்று  நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்றார். விழாவில், தமிழக ஆளுநரும் மற்றும் வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என்.ரவி பங்கேற்று தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 4,434 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில், கல்லூரிகளில் இருந்து 1,536 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 2,898 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர்.

இந்நிகழ்வில் தோல் ஏற்றுமதி கழக நிர்வாக இயக்குனர் செல்வம் பேசுகையில்,இக்கல்லூரியில் படித்த மாணவனாக, இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது., 30 வருடத்திற்கு முன்னர் தானும் இதே இடத்தில் மாணவனாக அமர்ந்து இருந்தேன். ஆனால் அன்று மேடையில் பேசிக் கொண்டு இருந்தவர்களின் வார்த்தையை தான் கேட்கவில்லை. இங்க இருக்கக் கூடிய மாணவர்கள் ஒருபோதும் அப்படி இருக்கக் கூடாது, இறைத்தேடி சென்ற பறவை கூடு திரும்பியதாக இன்று நான் உணர்கிறேன்.

Advertisment
Advertisements

இன்று உங்களில் ஒருவனாக என்னையும், என்னில் ஒருவனாக உங்களையும் பார்க்கிறேன். கல்லூரியில் நான் படிக்கும் போது நூலகம், காபி கடை, ஆய்வகங்களில், மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போன்றவைகளை என்னால் இன்றும் மறக்க முடியாது. நீங்களும் இதே விஷயங்களை இங்கிருந்து சென்ற பிறகு உணர்வீர்கள். பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி பல்கலைக் கழகத்தின் சாதனைகளை அழகாக எடுத்துக் கூறினார்.

இந்த பல்கலைக் கழகம் ஒவ்வொரு முறையும் இந்தியா முழுமைக்கும் 200 சிவில் சர்வெண்ட்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறி நிறைய முன்னோடிகளின் வெற்றிக் கதைகளை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். வேளாண்மை மாணவராகவும் ஆராய்ச்சியாளராகவும் பட்டதாரிகளாகவும் இருப்பவர்களுக்கு இன்று வேளாண் துறையில் காலநிலை மாற்றம், பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக உலக அளவில் பல்வேறு சவால்கள் இருக்கிறது.

அதனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தீர்வுகளை நாம் வகுக்க வேண்டும். அப்போதுதான் வேளாண் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்தார். இவ்விழாவில், பதிவாளர் தமிழ்வேந்தன், வேளாண் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: