சவால்கள் நிறைந்த இன்றைய காலத்தில் மாணவ பருவத்திலேயே மாணவர்கள் கல்வி பயில்வதோடு கூடுதல் திறன்களை வளர்த்தக் கொள்வது அவசியம் என இந்தியாவின் முதல் நிதியமைச்சரின் பேத்தி நளினி சண்முகம் கூறியுள்ளர்ர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள (தனியார்) ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பில் ("Young Preneur") ("யங் ப்ரேனர் 2025") எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர்.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும் ஆர்.கே.எஸ்.கல்வி நிலையத்தின் நிறுவனர் மறைந்த டாக்டர். ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் பேத்தியான நளினி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறுகையில், சவால்கள் நிறைந்த இன்றைய காலத்தில் மாணவ பருவத்திலேயே மாணவர்கள் கல்வி பயில்வதோடு கூடுதல் திறன்களை வளர்த்தி கொள்வது அவசியமாக இருக்கிறது.
அதன் அடிப்படையில் மாணவர்கள் வாழ்க்கை திறன்களை மேம்படுத்த செய்யும் ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நேரடியாக தொழில் துறை அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் சுமார் 25"க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/11/p8eypR8BCRd1xZgAspk6.jpg)
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள்,பேன்சி பொருட்கள், உணவு அரங்குகள்,என பல்வேறு அரங்குகளை அமைத்த மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பொருட்களை ஆவலுடன் வாங்கி சென்றனர். மாணவர்களின் அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்றும் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
2025 ஆண்டில் இளம் தலைமுறை மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் பண்பாட்டினை மதிக்கவும் தொழில்துறை ஆவலை வளர்க்கவும் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும் ஆர்.கே.எஸ்.கல்வி நிலையத்தின் நிறுவனமான மறைந்த டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் பேத்தியான நளினி சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“