இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம் மீது விதித்த தடையை கர்நாடக உயர் நீதி மன்றம் அகற்றியதை தொடர்ந்து, நிறுவனம் மீண்டும் எழுச்சியாக செயல்பட உள்ளதாக ஸ்ரீதர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டு முதல் - இந்திய கம்பெனிச் சட்டத்தின் பிரிவு விதிகளின் கீழ் ஒரு கல்விக் குழுமமாக, இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனம்,செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின் தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் இந்திய வரிப் பயிற்சியாளர்களை ஒருங்கிணத்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளைக் கூட்டங்கள், வகுப்புகள், தொடர் வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவைகளை நவீன மின்னனு உபகரணங்கள் மூலமாக வழங்கி வருகின்றனர். இந்தியாவில் கோவை உட்பட பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டு செயல்பட்டு இந்நிறுவனத்தின் மீது சமீபத்தில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தனர்.
மத்திய அரசின் அமைச்சகங்கள், மற்றும் இதர துறைகளின் மீது வழக்குத் தொடர்ந்த நிலையில், பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துள்ளது..
இதனை தொடர்ந்து இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோவை கிளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் பாரத்தசாரதி மற்றும் கோவை கிளையின் தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். அப்போது, பட்டய பயிற்சியாளர்களுக்கு வரி தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் பணிகள் மீண்டும் எழுச்சியாக நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
கூட்டத்தில், கோவை, சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், மைசூர், பெங்களூர், ஹூப்ளி மற்றும் பெல்லாரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டய வரிப் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“