தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்

Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu College Admission Update : தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வரும் ஜூலை 31 ந் தேதிக்கு பின் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ச்கை தொடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தடை செய்யப்பட்டது. தற்போது தமிழத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கல்லூரிகளுக்காக மாணவர்கள் சேர்க்கை எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 31-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் தேர்வு முடிவுகள் எப்படி வழங்க வேண்டும் என்று மதிப்பீட்டு அளவுகோல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் கல்லூரி சேர்க்கை குறித்து முதல்வர் ஸ்டாலின்னை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியம் மாணவர்களின் மதிப்பீட்டு அளவுகோலின் அடிப்படையிலான பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை ஜூலை 31 க்கு முன் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைகளுக்காக மாணவர்களை தரவரிசைப்படுத்த கல்லூரிகள் சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு வாரியங்களும் ஜூலை 31 க்கு முன்னர் மதிப்பெண்களை இறுதி செய்யும். எனவே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை ஜூலை 31 க்குப் பிறகு தொடங்கும், என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக  வெளியான தகவலில், சில தனியார் கல்லூரிகள் சேர்க்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே கல்லூரி சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் எந்தவொரு கல்லூரியும் இப்போது சேர்க்கைகளைத் தொடங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டத. ஆனாலும் , அரசு அறிவித்த மதிப்பீட்டு முறையின்படி, பத்தாம் வகுப்பு மாணவாகளின்  9-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த வாரம் தொடங்கியது.

இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு அறிவித்த மதிப்பீட்டு முறையின்படி, பத்தாம் வகுப்பு வாரிய தேர்வுகள் 50% வெயிட்டேஜையும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் 20% வெயிட்டேஜையும் பன்னிரெண்டாம் வகுப்பு உள் மதிப்பீடு மற்றும் நடைமுறைத் தேர்வுகளுக்கு அரசாங்கம் 30% வெயிட்டேஜ் அறிவித்துள்ளது. இதன் மூலம் யுஜி சேர்க்கை பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளுக்குப் பிறகுதான் தொடங்க முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu college admission after july 31 minister ponmudi said

Next Story
வீடியோ : பள்ளிகளை திறப்பதே நல்லது – கல்வியாளர் கமல செல்வராஜ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com