கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த இஞ்ஜினியரிங் கலந்தாய்வில் 80, 000 க்கும் அதிகமான இடங்கள் நிரப்ப படாமல் இருந்தது என்பதை நாம் அறிந்திருப்போம். இந்த செய்தி நம்மைக் கலக்கமடைய வைத்திருந்தாலும், தற்போது வந்துள்ள செய்தி தமிழகத்தில் உயர்க் கல்வி குறித்த நமது நம்பிக்கையை பலப்படுத்துவதாகவே உள்ளது.
ஆம்.... கடந்த ஆண்டை விட இந்த வருடம் கேம்பஸ் மூலம் வேலை கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான முறையில் உயர்ந்துள்ளது. அதிலும், குறிப்பாக டயர்-2 வில் அமைத்திருக்கும் கல்லூரிகள் இந்த கேம்பஸ் வேலைவாய்ப்பில் கலக்கியுள்ளன.
ஐடி மற்றும் ஐடி பொருட்களை உற்பத்தி செய்யும் நிருவனங்களான டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட், இன்போசிஸ், அமேசான், விசா,மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னிலையில் இருக்கின்றன.
உதாரணாமாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் இருக்கும் நான்கு கல்லூரி வளாங்களில் 753 மாணவர்கள் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர். கடந்த வருடம் இந்த எண்ணிக்கை வெறும் 576 என்பதாகும். இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில் ஆர்எம்கே, ஸ்ரீ சாய்ராம் கல்லூரிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தற்போதே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா அரசின் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப் பட்டு வருவதாலும், பிக் டேட்டா போன்றவைகளாலும் ஐடி நிறுவனங்கள் மாணவர்கள் ஈர்ப்பதில் ஆர்வமாய் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கோர் கம்பெனிகள்( ஆடோமொபைல்) இன்னும் சொல்லும்படி மாணவர்களை ஈர்க்கவில்லை. தொழில் மந்த நிலை காரணமாக பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காடிவருவதாக தெரிய வருகிறது.