கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ பற்றிய எண்ணம் மிகவும் சவாலானதாக இருந்தாலும் சுவாரஸ்யமான ஒன்றாகும். பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வந்து நுண்ணறிவு தேர்வு (aptitude), விவாதா திறன் , ஆளுமைத் திறன் எல்லாம் சோதனை செய்வார்கள். இந்த அணைத்து செயல்முறைகளும் முடிவுக்கு வர, குறைந்தது மூன்று மாதங்களாவது தாக்கு பிடிக்கும்.
ஆனால், தற்போது இந்த செயல்முறையில் பெரிய மாற்றங்களை கார்பரேட் நிறுவனங்கள் செய்துள்ளன. தற்போது, அனைத்து நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூவை ஆன்லைன் மூலம் செய்ய விரும்பிகின்றன. சத்யபாமா போன்ற நிகர்நிலை பல்கலைக்கழகம் தங்களுடைய மொத்த கேம்பஸ் இன்டர்வியூ செயல்முறையும் ஆன்லைன் மூலம் செய்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவால் ( ஏ.ஐ ) செய்யப்பட்ட சாப்ட்வேர் மூலம் ஆன்லைன் நுன்னறிவுத் தேர்வு (aptitude test) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பதற்கு முன்பு மாணவர்களுக்கு தெளிவாக என்ன செய்யலாம் ? என்ன செய்யக் கூடாது? போன்ற தகவல்களும் கொடுக்கப்படுகின்றன.
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களில் எழுதிக் கொள்ளலாம். எனவே, இந்த தேர்வுக்கு மேற்பார்வையாளர் என்று யாரும் கிடையாது. ஆனால், நாம் தேர்வெழுதும் அந்த மென்பொருளே ஒரு வகையான மேற்பார்வையாளர் தான். நமது உடல் அசைவு, கை அசைவு போன்ற அனைத்தையும் அந்த பென்பொருள் ஆராயும்.
காக்னிசன்ட் டெக்னாலஜி போன்ற பெரிய நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே மென்பொருள் மூலம் ஆன்லைன் நடத்தப்படும் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. காக்னிசன்ட் வெற்றியைப் பார்த்து டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் தற்போது ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தேர்வை நடத்தி வருகின்றனர்.