கடலூர் மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 17/4/2025 வியாழக்கிழமை அன்று கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 15-இற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆனண வழங்கப்படவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு (SSLC), பன்னிரண்டாம் வகுப்பு (HSC), ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்கள்.