Advertisment

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம்; தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணத்தை டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்; யாருக்கு எல்லாம் விலக்கு? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
Ramanathapuram Collector Inspects TN board 2024 Class 12th Plus 2 exam Centre Tamil News

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பெற்று டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டண தொகையை பெற்று, ஆன்லைனில் டிசம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். செய்முறை பாடங்கள் கொண்ட மாணவர்களுக்கு ரூ.225, செய்முறை பாடங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி/டி.சி பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பி.சி, பி.சி.எம் பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

சுயநிதி/ மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு இல்லை

11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டண தொகையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20-ம் தேதி முதல் செலுத்தலாம். ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை வடிவிலான மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

12th Practical Exam exam School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment