Advertisment

எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுனர் 'அப்பாயின்மென்ட்'-க்கு காத்திருக்கும் தேடுதல் குழு

2021 இல் முன்னாள் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ஆளுநர் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்தார். இந்த ஆண்டு புதிய துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author-image
WebDesk
New Update
எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுனர் 'அப்பாயின்மென்ட்'-க்கு காத்திருக்கும் தேடுதல் குழு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் கொண்ட குழுவை பரிந்துரைப்பதற்காக அரசு நியமித்த 3 பேர் கொண்ட தேடுதல் குழு, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்காக காத்திருக்கிறது, என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் சுதா சேஷய்யனின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்தது.

இதையும் படியுங்கள்: நீட் தேர்வு 2023; NCERT புத்தகங்களில் படிக்க வேண்டிய முக்கிய டாபிக்ஸ் இங்கே!

ஜனவரி 4 ஆம் தேதி, சுகாதார செயலாளர் டாக்டர் பி செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு சுகாதார செயலாளராக பணியாற்றிய முன்னாள் செயலாளர் வி.கே சுப்புராஜ், குழுவின் அரசு பிரதிநிதி மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மற்ற இரண்டு உறுப்பினர்களில் மூத்த மயக்க மருந்து நிபுணர் டாக்டர் வசந்தி வித்யாசக்ரன், செனட் பிரதிநிதியாகவும் மற்றும் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே செல்வகுமார், ஆளும் குழு பிரதிநிதியாகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், தேடுதல் குழு ஆளுனரைச் சந்திப்பதற்காக காத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமான ஒன்று என்றாலும், பணியைத் தொடங்குவதற்கு முன், குழு ஆளுநரை சந்திப்பதை உறுதி செய்ய அரசு விரும்புகிறது, எனவே நியமனத்தில் எந்த தாமதமும் இல்லை, என்றும் அவர் கூறினார்.

”ஆளுநர் இந்த குழுவிற்கு வழி காட்ட வேண்டும். குழுவிற்கு உதவ அவர் அதிகாரிகளை நியமிப்பார், அதன் பிறகு அவர்கள் பணியைத் தொடங்குவார்கள். நாங்கள் இரண்டு மாதங்களாக ராஜ் பவனில் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறோம். சுகாதார செயலாளர் ராஜ் பவனை தொடர்பு கொண்டுள்ளார். ஆளுநர் மற்ற வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும், ஆனால் கூட்டம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் எங்களிடம் கூறப்படுகிறது,” என்று அமைச்சர் கூறினார்.

”ஆளுநருடனான குழுவின் சந்திப்பு வழக்கமான ஒன்று மட்டுமே, நெறிமுறை அல்ல. இருப்பினும், 2021 இல் முன்னாள் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ​​ஆளுநர் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்தார். இந்த ஆண்டு புதிய துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

2021 ஆம் ஆண்டில், ஆளுநர் ஆர்.என்.ரவி முந்தைய தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பரிந்துரைகளையும் நிராகரித்து, முந்தைய துணைவேந்தர் டாக்டர் சேஷய்யனின் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டித்தார்.

செப்டம்பர் 2022 இல், ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் அனுபவம் உட்பட பல தேவைகளை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் தகுதிக்கான திருத்தங்களை தமிழ்நாடு முன்மொழிந்தது. தகுதி நெறிமுறைகளை விவாதிக்க ஒரு குழு உட்பட சில பரிந்துரைகளுடன் திருத்தத்தை ராஜ் பவன் திருப்பி அனுப்பியது. தேடுதல் குழு நியமனத்திற்கு ஒரு நாள் முன்னதாக, நியமன விதிகள் மாற்றியமைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment