தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பதுறையில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் மின் ஆளுகை (Tamilnadu e Governance Agency ) இயக்குனரகத்தில் 29 பதவிகளுக்கு மொத்தம் 35 காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி கடைசி தேதியாகும்.
இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் பொறியியலில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கானது. எனவே பொறியியல் படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பதவியின் பெயரும் காலியிடங்களின் எண்ணிக்கையும்
Senior Business Analyst - 1
Project Manager - 1
Full Stack Dev Lead/Architect - 1
Cloud Solutions Architect - 1
Web Content Admin - 1
Senior Software Developer - Android/IOS - 2
Senior Software Developer - Web Front-end (React/Angular) - 4
Tech Lead - Backend Services (Node.js/JS) - 2
Senior Software Developer - Backend(Core Java) - 1
Architect - AI/ML - 1
Data Architect - 1
Data Scientist - 2
AI/ML Engineer - 1
Business Consultant - Blockchain - 1
Architect - Blockchain Backbone - 1
Blockchain Applications Lead - 1
Lead Developer - Blockchain - 2
Tech Lead - GIS - 1
Tech Lead - Remote Sensing - 1
Tech Lead DB Integration / Database Developer - 1
Junior Solution Architect - Backend (Core Java) - 1
Tech Lead Service Integration - Java/JS Web Development Framework - 1
Tech Lead Portal - Front-end (React/Angular) - 1
Senior System Analyst - Software Development Engineer in Test (SDET) - 1
System Analyst - UI/UX Designer - 1
Database Administrator / Developer - 1
Senior Programmer - 2
Programmer - 1
Assistant Programmer – 1
கல்வித் தகுதி: இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க BE / B Tech / MCA / MSc / ME / M Tech படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். MBA படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் தேவை. அது குறித்த விவரங்கள் மின் ஆளுகையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://tnega.tn.gov.in/careers என்ற இணையதள பக்கம் மூலம் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil