scorecardresearch

’பல முறை முறையிட்டும் பலனில்லை’: மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து ஜவகர்நேசன் விலகல்

மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார்.

ஜவகர்நேசன்

மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார்.  

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை, மாநில அரசிற்கு எதிராக இருக்கிறது என்பதால் அதை ஏற்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு என்ற தனிக் கல்விக்கொள்கை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தமிழகத்திற்கு தனியாக கல்விக்கொள்ளையை உருவாக்கி வருகின்றனர்.

இந்தக் குழுவில் கடந்த ஒரு வருடமாக, ஒருங்கணிப்பாளரும், உறுப்பினராக பணியாற்றி வந்தவர் ஜவகர்நேசன். இந்நிலையில் அவர் பணியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  எந்த நோக்கத்திற்கு குழு உருவாக்கப்பட்டதோ, அதற்கு எதிராக குழு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  தனக்கு மிகப் பெரிய நெருக்கடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தன்னை செய்யப்பட நிர்பந்தித்தனர் என்றும் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu education draft committee jawahar nesan come out from committee