Advertisment

5 வயதில் 1-ம் வகுப்பு: முதன்மை மொழியாக தமிழ்; மாநில கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டு குழு அளித்துள்ள மாநில கல்வி கொள்கை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
TN School Reopen Date 2024 Change latest updates in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

3-வது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. அரசு, கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கைளை ஏற்க மருத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கைளை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு குழு அமைத்தது. 14 பேர் கொண்ட இந்த குழு தற்போது மாநில கல்விக்கொள்கை தொடர்பான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.

Advertisment

இந்த மாநில கல்வி கொள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வியில், முதல் மொழியாக தமிழ் மொழியை நிலை நிறுத்துவது அவசியம், தொடக்க நிலை முதல் பல்கலைகழக நிலை வரை, தமிழ் வழி கல்வியை வழங்குதல். மாநிலம் முழுவதும் இருமொழி கொள்கை கடைபிடித்தல், 3,5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருத்தல் கூடாது.

மேலும், கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும்

நீட் தேர்வு கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

கல்லூரி சேர்ச்கையின் போது 12-ம் வகுப்பு மதிப்பெண்களுடன் 1-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சி.பி.எஸ்.இ மற்றும், டீமீடு பல்கலைகழகம் ஆகியவற்றிற்கான, கட்டணங்கள் சீரமைக்கப்படுவதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கு தாய் – குழந்தை பராமரிப்பு மையம் என பெயரிட வேண்டும். எம்.ஜி.ஆர், அண்ணா, தமிழ் பல்கலைகழகங்களில், ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானர்வர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும். ஆனால், 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.

தமிழ் பல்கலைகழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

தமிழ் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும், ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆட்சியர் தலைமையில், 1 மனநல ஆலோசகர், 1சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.

தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment