12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுளளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளி பொதுத்தேர்தவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
ஏற்கனவே இந்தியாவில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.தொடர்ந்து இந்த ஆண்டு அதிக நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு சட்டசபை தேர்தலுக்கு பின் 12-ம் வகுப்பு தேர்தவுகள் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்கு பாதிக்கும் அச்சம் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வெண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், இந்த கூட்டம் முடிந்த பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil