12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்தவு இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து்ளளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்தவில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டும் 9, 10,11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்ட்டது.

இதில் 12-ம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, தேர்தல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட:டு வருகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்புக்கான தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்து விட்டது. எந்த நிமிடம் கொரோனா தொற்றுமோ? என்ற அச்சத்துடன் மாணவர்களால் தேர்வு எழுத முடியாது. அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளைக் கூட எழுத முடியாத நிலை உருவாகும். பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.

எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ஒருவேளை பொதுத்தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu education update 2 students exam cancelled ramadoss

Next Story
பிளஸ் 2 மார்க் பயன்படாது: மத்திய பல்கலைக்கழக இளங்கலை படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com