தமிழக அரசு வேலை; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

Tamilnadu Electricity Regulatory commission vacancies apply soon: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவியாளர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தனி உதவியாளர் உள்ளிட்ட 3 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனி உதவியாளர், உதவியாளர் மற்றும் சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தனி உதவியாளர் (Personal Assistant to Director)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. பொறியியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் : மூன்று பணி அனுபவம் அவசியம். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.47,000

உதவியாளர் – சட்டம் (Assistant Legal)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் : நீதிமன்ற பணிகளில் மூன்று வருட அனுபவம் அவசியம். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.26,000

உதவியாளர் (Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வித் தகுதி : முதுகலை வணிகவியல் அல்லது ICWA / CA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் : அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 வருடம் பணி புரிந்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.26,000

வயதுத் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2021 அன்று 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் சுய விவர படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி,

The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4 th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்க க்டைசி தேதி : 30.09.2021

இந்த அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf என்ற இணையதள பக்கத்தினை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu electricity regulatory commission vacancies apply soon

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com