Advertisment

பொறியியல் சேர்க்கை; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்கும்; எப்படி?

குறைந்த கட் ஆஃப் உள்ளவர்களுக்கும் டாப் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு; எப்படி தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNEA கவுன்சிலிங்; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்க… இப்படி செய்யுங்க!

Tamilnadu Engineering Admission 2022 low cut off also get top colleges: பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக உள்ளவர்களும் பொறியியல் படிப்புகளுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு தமிழகத்தின் டாப் கல்லூரிகளிலே இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடையே சற்று குழப்பம் இருக்கும். நமக்கு சிறந்த கல்லூரி கிடைக்குமா? விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா? எத்தனை கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு என்ன மாதிரியான கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற கேள்விகள் எழும்.

இதையும் படியுங்கள்: மின்சார வாகன சந்தையின் வளர்ச்சி… பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளை மறுவடிவமைக்க தமிழக அரசு திட்டம்

இந்த கேள்விகளுக்கு எல்லாம் தீர்வாக, கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில், குறைந்த கட் ஆஃப் உடையவர்களுக்கும் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த கட் ஆஃப், அதாவது 120 முதல் 160 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருப்பவர்களுக்கு என்ன மாதிரியான கல்லூரி கிடைக்கும், எந்த பாடப்பிரிவு என்பதை தற்போதைக்கு உறுதியாக சொல்வது கடினம் என்றாலும், கடந்த ஆண்டுகளில் குறைந்த மதிப்பெண்கள் உடையவர்களுக்கு டாப் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது.

ஆவரேஜ் கட் ஆஃப் உள்ளவர்கள் பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது என ரமேஷ்பிரபா அறிவுறுத்துகிறார். ஏனெனில் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவை படிப்பதற்காக, சிறந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வேறு பாடப்பிரிவுகள் இருக்கும்போது, சுமாரான பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, உங்களுக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.

குறிப்பாக கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக் போன்ற கல்லூரிகளில் அதிகம் விரும்பப்படாத நிறைய பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதனைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதனால், குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு அந்த பாடப்பிரிவுகள் கிடைக்கின்றன. மேலும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களில் இடஒதுக்கீட்டு பிரிவினர்கள் தாராளமாக டாப் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

அடுத்ததாக, பெரும்பாலானோர்கள் டாப் கல்லூரிகளில் விரும்பிய பாடங்கள் கிடைக்கவில்லை என்றால், தங்களுக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதனாலும் குறைந்த கட் ஆஃப் உடையவர்களுக்கும் சிறந்த கல்லூரிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே, குறைந்த கட் ஆஃப் உடையவர்கள் தாராளமாக பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பியுங்கள், சிறந்த கல்லூரிகளை விருப்ப தேர்வாக தேர்ந்தெடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment