பள்ளி படிப்பை முடித்த கல்லூரி மாணவர்கள் அடுத்து மேல் படிப்புக்காக எந்த கல்லூரியில் சேரலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். இதில் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக இருந்து பொறியியல் படிப்புதான். அதற்கு தகுந்தபடி தமிழகத்தில் பொறியியல் கல்லூரகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுதோறும் பொயிறியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தங்கள் படிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, தனது ஊருக்கு அருகில் உள்ள நகரத்து கல்லூரிகளே முதல் தேர்வாக உள்ளது. அதற்கு அடுத்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்வார்கள். இந்த கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, படிப்பு, கல்லூரியில் உள்ள, நூலகம் எப்படி இருக்கிறது? கல்லூரியின் சூழ்நிலை, விடுதியின் சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை பொருத்தே மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
அதே சமயம், வெளியூர் சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் படிக்க முடிவு செய்து அந்த மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இதனால் அவர்கள் படிக்கும் கல்லூரி 2-ம் தர கல்லூரி என்றாலும் கூட தங்கள் விரும்பிய மாவட்டத்திற்குள் உள்ளது என்பதால் அதனை தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு அருகில் முதல் தரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெறுகிறது. இதனால் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட இந்த முதல் தர கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது.
அந்த வகையில், கவுன்சிலிங்கின்போது முதல் ரவுண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாத அதே சமயம் முதல் தரத்தில் இருக்கும் தமிழகத்தின் டாப் 20 கல்லூரிகளின் பட்டியலை விவேக் மேத்ஸ் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள கல்லூரிகள் தன்னாட்சி தரத்தில் இயங்கி வருகின்றன. அதே சமயம் அதிக பிளேஸ்மென்ட் கொடுக்கும் கல்லூரிகள் ஆகும். அதேபோல் கடந்த சில ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் தவறவிட்ட சிறந்த கல்லூரிகள்.
1 5008 தியாகராஜர் கல்லூரி – திருப்பரங்குன்றம் மதுரை
2 1219 ஸ்ரீவெங்கடேஷ்வரா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் – ஸ்ரீபெரும்புதூர் – காஞ்சிபுரம்
3 2711 கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி பெருந்துரை ஈரோடு
4 2702 பன்னாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம் ஈரோடு
5 2719 ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ் வேட்டமலைபாளையம் கோயம்புத்தூர்
6 2706 டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி மக்கிநாயக்கன்பட்டி பொள்ளாச்சி – கோயம்புத்தூர்
7 2618 சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி – சூரமங்கலம் – சேலம்
8 4961 நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் – கோவில்பட்டி – தூத்துக்குடி
9 1126 ஜே.என்.என். இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி – ஊத்துக்கோட்டை தஞ்சாவூர்
10 2622 பி.என்.பி இன்ஜினியரிங் காலேஜ் கரூர்
11 3830 கே.ராமகிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் – சமயபுரம் – திருச்சி
12 2727 ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி – வென்கிட்டபுரம் – கோயம்புத்தூர்
13 4959 காமராஜ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி – விருதுநகர்
14 2357 பி.எஸ்.பி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி – கோயம்புத்தூர்
15 2704 கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி – கோயம்புத்தூர்
16 2613 கே.எஸ்.ஆர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் – திருச்செங்கோடு – நாமக்கல்
17 2653 கே.ஐ.ஒ.டி – காக்காபாளையம் – சேலம்
18 2709 அரசு பொறியியல் கல்லூரி – ஈரோடு
19 2710 கற்பகம் இன்ஜினியரிங் காலேஜ் – கோயம்புத்தூர்
20 4955 பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ் – திருநெல்வேலி
இந்த கல்லூரிகள் அனைத்தும் தன்னாட்சி தரத்தில் இயங்கி வருகிறது. இது குறித்து விவேக் மேத்ஸ் யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.