scorecardresearch

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

TNEA 2021 rank list: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

TNEA 2021 rank list, TNEA Counselling

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனையடுத்து சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. http://www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரேங்குகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்.17 முதல் 24ஆம் தேதி வரையும், பொது கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறும்.

அதன்பின்னர் துணை கலந்தாய்வு அக்.19ஆம் தேதியும், எஸ், எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24ஆம் தேதியும் நடைபெறும். அக்.25ஆம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிவரிசை பட்டியலை தெரிந்துகொள்வது எப்படி?

https://www.tneaonline.org/user/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற சான்றுகளைப் பதிவிட்டு சமர்பிக்கவும்

தரவரிசை பட்டியல் திரையில் தோன்றும்.

தரவரிசைப் பட்டியலை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu engineering admission tnea rank list how to check counselling schedule

Best of Express