Advertisment

7.5% இட ஒதுக்கீடு - தொடங்கியது பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு

Tamilnadu Engineering admissions online counselling starts: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021; ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்; 7.5% இடஒதுக்கீடு உட்பட சிறப்பு பிரிவுகளுக்கு முதலில் கலந்தாய்வு

author-image
WebDesk
New Update
TNEA 2021 rank list, TNEA Counselling

பொறியியில் மாணவர் சேர்க்கை 12 ஆயிரத்து 837 காலி இடங்களுடன் ஆன்லைனில் இன்று தொடங்கியது. கலந்தாய்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

2021-22 கல்வியாண்டில் பி.இ, பிடெக் பாடப்பிரிவில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு, 440 பொறியியல் கல்லூரிகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு நேற்று (செப்.14) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், 87 ஆயிரத்து 291 பேர் மாணவர்கள், 51 ஆயிரத்து 730 பேர் மாணவிகள், 12 பேர் திருநங்கைகள் ஆவர். 200க்கு 200 மதிப்பெண்களை 13 மாணவர்கள் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்களை 8 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மொத்தமாக 1 லட்சத்து  51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாக உள்ளது.

இந்நிலையில், 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 51 உதவி மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று  அரசு பள்ளி மாணவ- மாணவியர்,  விளையாட்டு,முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அரசு பள்ளியில் படித்த 15 ஆயிரத்து 660 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் விளையாட்டு பிரிவில் 48 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் நான்கு மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேருக்கும், இவர்களுடன் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் இன்று கலந்தாய்வு நடக்கிறது.

இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நேரடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் செப்.18 ஆம் தேதி வழங்குகிறார்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு

இதனை தொடர்ந்து,பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு  வரும் 27ஆம்தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துணை கலந்தாய்வு அக்டோபர் 19- 23ஆம் தேதிவரையும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் காலியாகும் இடங்களை ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கும் கவுன்சிலிங் அக்டோபர் 24-25 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மொத்த மாணவர்கள் - 1,39,033

மாணவர்கள் எண்ணிக்கை - 87,291

மாணவிகள் எண்ணிக்கை - 51,730

மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை - 12

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 1,20,886

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 17,121

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 613

பிற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 414

கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகள் - 440

மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு, இந்தாண்டு  5 கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Anna University Engineering Counselling Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment