Advertisment

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 8,500 இடங்கள் அதிகரிக்க திட்டம்

கல்லூரிகள் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் இருந்து 2,946 இடங்களைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

author-image
WebDesk
New Update
College

கல்லூரி மாணவர்கள்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அடுத்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் மேலும் 8,490 இடங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களிடையே உள்ள ஆர்வத்தை வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisment

அதே நேரத்தில், கல்லூரிகள் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் இருந்து 2,946 இடங்களைக் குறைக்க விரும்புகின்றன. மேலும், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் 750 இடங்கள் உயர்த்தப்பட உள்ளது. இதில் 2023-24 கல்வியாண்டில் தங்கள் படிப்பை மாற்றிக்கொள்ள 134 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இயந்திர கற்றல் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில், குறுகலான சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தேவை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வளர்ந்து வரும் பகுதிகளில் பொறியியல் படிப்புகளைத் தொடங்க தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிக்கிறது. சேட்ஜிபிடி (ChatGPT)  யின் தோற்றம் கல்லூரிகள் மற்றும் மாணவர்களிடையே அல் (AL) மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

முன்பு, இளங்கலையில் சூப்பர் ஸ்பெஷலைசேஷன் படிப்பது தவறாகக் கருதப்பட்டது. ஆனால் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத் தலையீடு காரணமாக இந்த பார்வை கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிட்டது. அல் (AL) படிப்பவர்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் ஐடி விண்ணப்பங்களுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டி கலைசெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், மாணவர்கள் எதிர்கால வேலை வாய்ப்புகளை அறியாமல் வளர்ந்து வரும் பகுதிகளில் அல் மற்றும் பிற படிப்புகளை தேர்வு செய்கிறார்கள். "2027ல், பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களில் 60% பேர் கணினி தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமான பணியாக இருக்கும்," என்றார்.

அதேபோல் கல்லூரிகளுக்கு ஒரு சவாலாக கணினி அறிவியல் ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளது, மேலும் அல், இயந்திர கற்றல் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி. "தலைசிறந்த கல்லூரிகள் நல்ல சம்பளம் வழங்குவதன் மூலம் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தும். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் சில மாணவர்கள் முதுகலை படிப்புகளை தேர்வு செய்ததால் மற்ற கல்லூரிகளில் பெரும் பற்றாக்குறை உள்ளது" என்று சுயநிதி வல்லுனர்களின் கூட்டமைப்பு துணை செயலாளர் ஆர்.எம்.கிஷோர் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். EEE, ECE ஆகிய ஆசிரியர்களை கணினி தொடர்பான படிப்புகளை கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அல் (AL) மற்றும் மெஷின் லேர்னிங் மற்றும் பிற வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி திட்டத்தை நடத்தவும் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment