/tamil-ie/media/media_files/uploads/2023/06/kanu.jpg)
வெளியான பொறியியல் தரவரிசை பட்டியல்
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிட்டார். மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா முதலிடத்தையும், தருமபுரியைச் சேர்ந்த ஹரிணி இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் படித்த சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி முதலிடத்தையும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிவேதிதா இரண்டாம் இடத்தையும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணக்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.