பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், சேர்க்கைக்கான கவுசிலிங்கில் கலந்துகொள்ளும்போது, இடஒதுக்கீடு மாணவர்களுக்கு இரட்டை வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறக்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
Advertisment
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து உயர்கல்விக்காக அதிகம் தேர்வு செய்யும் படிப்பு பொறியியல் கல்வி. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள், இந்த படிப்புக்காக விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டில், லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்காக ரேங்க் பட்டியல் கடந்த ஜூலை 10-ந் தேதி வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவராவ் வெளியிட்ட இந்த பட்டியலை வைத்துக்கொண்டு மாணவர்கள் பொறியியல் படிப்புக்கான கவுசிலிங்கில் பங்கேற்று தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள். இவ்வாறு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் பல இருக்கிறது.
அந்த வகையில் இந்த பதிவில், கவுன்சிலிங்கில் பங்கேற்கும் இடஒதுக்கீடு மாணவர்களுக்கு கிடைக்கும் இரட்டை வாய்ப்பு குறித்து பார்ப்போம். பொதுவாக பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில், முதலில் பொது பிரிவில் சேர்க்கை நடக்கும். இதில் ஒட்டுமொத்தமாக அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எந்த கம்யூனிட்டியாக இருந்தாலும், அவர்கள் பொது பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுவார். இந்த பொது பிரிவில் வாய்ப்பு கிடைக்காத கம்யூனிட்டி மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
Advertisment
Advertisements
பொது பிரிவில், ஃபார்வேர்டு கம்யூனிட்டி (ஓ.சி) மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் அப்படி இல்லை ஒட்டுமொத்தமாக அதிக கட்ஆஃப் பெற்ற மாணவர்கள் இந்த பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்த பிரிவில் சீட் கிடைக்காத ஃபார்வேர்டு கம்யூனிட்டி (ஓ.சி) மாணவர்கள் அடுத்து எந்த பிரிவிலும் சேர முடியாது. அதே சமயம், பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, பி.சி.எம். எஸ்.டி உள்ளிட்ட கம்யூனிட்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பொது பிரிவில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் படி சீட் வழங்கப்படும்.
இதன் மூலம் இடஒதுக்கீடு பிரிவில் உள்ள மாணவர்கள் பொதுபிரிவில் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும், தங்களது கம்யூனிட்டி பிரிவில் சீட் பெற்றுக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. இதை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரியர் கைடன்ஸ் என்ற யூடியூப் சேனலில் இது குறித்து அஸ்வின் என்பவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“