TNEA 2025: இன்ஜினியரிங் கவுன்சலிங்; சென்னை மண்டலத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் லிஸ்ட்!
சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 80-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களையும் சேர்த்து டாப் 10-ல் உள்ள பொறியியல் கல்லூரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 80-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களையும் சேர்த்து டாப் 10-ல் உள்ள பொறியியல் கல்லூரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகள் குறித்து தினேஷ் பிரபு என்பவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சென்னை மண்டலத்தில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகள் என்னென்ன என்பது குறித்து தினேஷ் பிரபு தனது வீடியோவில் கூறியுள்ளார். சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 80-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களையும் சேர்த்து டாப் 10-ல் உள்ள பொறியியல் கல்லூரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1), அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (கவுன்சிலிங் கோடு 4) உள்ளது. 2-வது இடத்தில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1315), 3-வது இடத்தில், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (கவுன்சிலிங் கோடு 1399) 4-வது இடத்தில், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி சென்னை (கவுன்சிலிங் கோடு 1211), 5-வது இடத்தில், ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (கவுன்சிலிங் கோடு 1432) ஆகிய கல்லூரி உள்ளன.
6-வது இடத்தில், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி சென்னை (கவுன்சிலிங் கோடு 1304), 7வது இடத்தில், சவீதா பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1216), 8-வது இடத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1219), 9-வது இடத்தில், ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1113), 10-வது இடத்தில், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி (கவுன்சிலிங் கோடு 1414) உள்ளது.