Tamilnadu Engineering counselling cut off range for all rounds: பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும்? ஒவ்வொரு ரவுண்ட் கவுன்சலிங்க்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? போன்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டாப் கல்லூரிகளுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும், ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த ஆண்டை விட சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்: TNEA 2022 Rank List: கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண்கள்; டாப் கல்லூரிகளுக்கு தேவையான கட் ஆஃப் எவ்வளவு?
இதனிடையே மாணவர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம், எந்ததெந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது.
இதனைத் தீர்க்கும் விதமாக, கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் ஒவ்வொரு ரவுண்ட் கவுன்சலிங்க்கான கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளின் கணக்கீடுகளின் படி இந்த கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் 184.5 முதல் 200 வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரை அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங்கிற்கு 173.5 முதல் 184.495 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. மூன்றாவது ரவுண்ட் கவுன்சலிங்கிற்கு 153.5 முதல் 173.495 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை உள்ளவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. நான்காவது ரவுண்ட் கவுன்சலிங்கில் 77.5 கட் மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைவரும் அழைக்கப்படுவர்.
இதேபோல், கல்வியாளர் அஸ்வின்
அதன்படி, முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் 185 அல்லது 184 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரை அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இரண்டாவது ரவுண்ட் கவுன்சலிங்கிற்கு 162 அல்லது 161 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரை அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. மூன்றாவது ரவுண்ட் கவுன்சலிங்கிற்கு 131 அல்லது 130 கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை உள்ளவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. நான்காவது ரவுண்ட் கவுன்சலிங்கில் 77.5 கட் மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைவரும் அழைக்கப்படுவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil