கடந்த மே-5ம் தேதி நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெபினார் மூலம் கலந்துரையாடினார். அப்போது, 2020-21 கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடவகுப்புகளுக்கான சேர்க்கை 31-8-2020க்குள் நிறைவுறும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை ஜூன் மாத இறுதியில் தொடங்குவதற்கான வேலைபாடுகளை முடிக்கி விட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், +2 தேர்வின் அடிப்படையில் தான் பொறியியல் கலந்தாய்வுகள் நடைபெறும். ஆனால், +2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஜூன் மாதத்தில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடைசி தேர்வு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாத இறுதியில் தான் +2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நிலை உள்ளது. இருப்பினும், வழக்கம் போல் ஜூன் மாத இறுதியில் பொறியியல் கலந்தாய்வை நடத்த இயக்ககம் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டுப் பருவம், பழைய மாணவர்களுக்கு 01.08.2020 அன்றும், புதிய மாணவர்களுக்கு 01.09.2020 அன்றும் தொடங்கும் என்று ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு 26 ஜுலை 2020 இல் நடைபெறும் என்றும், .இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்) தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும் மனிதவள மேம்பாடு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், யு.ஜி.சி நெட்–2020, தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil