Tamilnadu Engineering counselling rank list analysis: பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும்? டாப் கல்லூரிகளுக்கு தேவையான கட் ஆஃப் எவ்வளவு? போன்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டாப் கல்லூரிகளுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும், ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த ஆண்டை விட சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: பொறியியல் சேர்க்கை தரவரிசை வெளியீடு; 20-ம் தேதி முதல் கவுன்சலிங் என பொன்முடி அறிவிப்பு
200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களில் கடந்த ஆண்டு 10 பேர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு 132 பேர் உள்ளனர். 195 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 1330 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3018 ஆவது இடத்தில் உள்ளது. 190 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 7513 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 8299 ஆவது இடத்தில் உள்ளது.
180 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 28737 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 20736 ஆவது இடத்தில் உள்ளது. 170 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 57016 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 35103 ஆவது இடத்தில் உள்ளது. 160 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 86118 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 50208 ஆவது இடத்தில் உள்ளது. 150 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டு 1,09,054 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 65028 ஆவது இடத்தில் உள்ளது.
அதிக கட் ஆஃப் மதிப்பெண்களில் அதிகமானோர் உள்ள நிலையில், அடுத்தடுத்த கட் ஆஃப் மதிப்பெண்களில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், டாப் கல்லூரிகளுக்கு கடும் போட்டி இருக்கும்.
குறிப்பாக முதல் ரவுண்ட் கவுன்சலிங் உள்ளவர்களுக்கு டாப் கல்லூரிகளை பிடிக்க கடும்போட்டி இருக்கும். எனவே அதிக முன்னுரிமைகளை தேர்வு செய்யுங்கள். டாப் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையிலும், நிறைய பேர் இ.சி.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி போன்ற முக்கிய பாடப்பிரிவுகளை விரும்புவதாலும் போட்டி கடுமையானதாக இருக்கும். எனவே அதிகமான முன்னுரிமைகளை தேர்வு செய்வதே சிறந்தது.
கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு உயரக்கூடும், கிட்டத்தட்ட 2.5 மதிப்பெண்கள் உயர வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும்போது, இந்த ஆண்டு 198 கட் ஆஃப் மதிப்பெண்களில் உள்ளவர்கள், கடந்த ஆண்டு 195.5 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கிடைத்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை கவனித்து தேர்வு செய்ய வேண்டும். இப்படியாக 188 வரை கட் ஆஃப் உள்ளவர்கள் 2 மதிப்பெண்கள் வரை கடந்த வருடம் குறைவாக உள்ளவர்களுக்கு கிடைத்த இடங்களை கவனிக்க வேண்டும்.
அதேநேரம், 188க்கு கீழும் 180 க்கு மேலும் உள்ளவர்களுக்கு சென்ற ஆண்டில் கிடைத்த இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளது. 180க்கு கீழ் எடுத்தவர்களுக்கு கடந்த ஆண்டில் 183 கட் ஆஃப்க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 3 மதிப்பெண்கள் குறையும். 175க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 180க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 5 மதிப்பெண்கள் குறையும். இதேபோல் 170க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 177க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 7 மதிப்பெண்கள் குறையும். 165க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 175க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 10 மதிப்பெண்கள் குறையும். 160க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 172க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 12 மதிப்பெண்கள் குறையும். 150க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 167க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 17 மதிப்பெண்கள் குறையும். 130க்கு மேல் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டில் 156க்கு கிடைத்த இடங்கள் கிடைக்கும். கிட்டதட்ட 26 மதிப்பெண்கள் குறையும்.
இதைவைத்து பார்க்கும்போது, முதல் சுற்று கலந்தாய்வு போட்டி மிகுந்ததாக இருக்கும். அதேநேரம் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று கலந்தாய்வில் உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டை சிறந்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.