மாணவர் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இணைய வழியில் நேற்று (ஜூலை 22) தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல், நவம்பர் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பருவத்தேர்வில் 2 கல்லூரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. அதேபோல, நவம்பர் மாத பருவத்தேர்வில் 10 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை.
மேலும், 22 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உள்ளது. மேலும், 41 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற உயர் கல்வித்துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“